விளையாட்டு

12 நிமிடம், 144 அம்புகள்: அம்பு எய்தல் போட்டியில் சாதனை படைத்த சிறுவர் சிறுமிகள்!

Published

on

12 நிமிடம், 144 அம்புகள்: அம்பு எய்தல் போட்டியில் சாதனை படைத்த சிறுவர் சிறுமிகள்!

மதுரவாயல் அருகே அம்பு எய்தல் போட்டியில் 12 சிறுவர்கள் இணைந்து உலக சாதனை படைத்து அசத்தினர்.சென்னை மதுரவாயல் அருகே நொளம்பூரில் அருணா ஆர்செரி அகாடமி சார்பில் அம்பு எய்தல் உலக சாதனை போட்டி நடைபெற்றது. இதில் 12 சிறுவர் சிறுமிகள் பங்கேற்று 12 நிமிடங்களில் ஒவ்வொருவரும் தலா 144 அம்புகளை எய்து உலக சாதனை படைத்தனர். சாதனை படைப்பதற்கு முன்பு அனைத்து சிறுவர்களும் தங்கள் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் ஆகியது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.அத்துடன் சிறுவர்கள் அம்புகளை எய்தபோது சோர்வடைந்ததால் அங்கு கூடியிருந்த பெற்றோர்கள் ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சிக்குப் பின்னர் 12 சிறுவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் உலக இளம் சாதனையாளர்கள் புத்தகத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுவர் சிறுமியர், உலக சாதனை படைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றும், தங்களை தயார் செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version