இலங்கை

சிவனொளிபாதமலை சென்ற டென்மார்க் பிரஜைக்கு நேர்ந்த துயரம்

Published

on

சிவனொளிபாதமலை சென்ற டென்மார்க் பிரஜைக்கு நேர்ந்த துயரம்

சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து (20) காலை 6 45 மணி அளவில் தவறி விழுந்து உள்ளார்.

அவரை ஊசி மலைப்பகுதியில் உள்ள பொலிஸார் நல்லத்தண்ணி நகருக்கு தூக்கி வந்து அவசர ஆம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரும் வேளை உயிரிழந்ததாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவத்தில் டென்மார்க் நாட்டைச் சார்ந்த ஜெப்டீன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப் பட்டு உள்ளதுடன் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version