இலங்கை

பதவியேற்றவுடன் அதிரடி மாற்றங்கள் ; உத்தரவுகளில் கையெழுத்திடவிருக்கும் டிரம்ப்!

Published

on

பதவியேற்றவுடன் அதிரடி மாற்றங்கள் ; உத்தரவுகளில் கையெழுத்திடவிருக்கும் டிரம்ப்!

 அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இன்று (20) பதவியேற்கவுள்ள நிலையில் அதிபராகப் பொறுப்பேற்றவுடன் முதல் நாளிலேயே பல உத்தரவுகளில் டிரம்ப் (Donald Trump) கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் ,

Advertisement

 நாடு கடத்துதல் திட்டம்

அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய நாடு கடத்துதல் திட்டத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக டிரம்ப் உறுதி கூறியிருந்தார். அமெரிக்காவில் புகலிடம் தேடுவோர், தெரிவிக்கப்படாத குடியேறிகள் எனச் சுமார் 11 மில்லியன் பேர் உள்ளனர்.

அவர்களில் 500,000 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள்.

Advertisement

புகலிடம் தேடுவோரைப் பாதுகாக்கும் சட்ட நடைமுறைகளை டிரம்ப் முடக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எல்லைகளில் அவசர நிலை அறிவிப்பு

வெளிநாட்டைச் சேர்ந்த குடியேறிகள் நாட்டிற்குள் நுழையவோ தங்கவோ தடை விதிக்க அமெரிக்க எல்லைகளில் அவசரநிலையை அறிவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

Advertisement

அதற்கு Title 42 எனும் சட்டத்தை நடைமுறைபடுத்தலாம். அந்தச் சட்டம் பொதுச் சுகாதார அவசரநிலையைக் குறிக்கும்.

ஆனால் அதை அதிபரால் அறிவிக்கமுடியாது. நோய்த்தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையத்தால் மட்டுமே அதைப் பிறப்பிக்க முடியும்.

  வட அமெரிக்காவுக்கு வரி விதித்தல்

Advertisement

கனடா, மெக்சிகோ ஆகியவற்றிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். போதைப்பொருள் கடத்தலை அவர் காரணமாகச் சுட்டினார்.

இதனால் வட அமெரிக்காவின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

 குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு

Advertisement

அதிபரானவுடன் முதல் 9 நிமிடங்களில் வழக்குகளை ஆராய்ந்து பொதுமன்னிப்பு வழங்கவிருப்பதாய் டிரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்க வரலாற்றிலேயே ஆக அதிகமானோருக்கு ஒரே நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எரிசக்தித்துறையில் புரட்சி

உடனடியாக தேசிய எரிசக்தி அவசரநிலை அறிவிக்கப்படும். புதிய திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

Advertisement

 குடியுரிமை வழங்குவதில் மாற்றம்

அமெரிக்கக் குடியுரிமை இல்லாத தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவில் கையெழுத்திட டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version