இலங்கை

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர்!

Published

on

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர்!

 இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார்.

இதன்போது பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து பிமல் ரத்நாயக்க பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Advertisement

ரயில் பயணத்தின்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்காணிக்க நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது, அடிக்கடி இடம்பெறும் ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, ரயில்களில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த ரயிலை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொதுமக்களிடம் இருந்து கேட்டறிந்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version