இலங்கை

மஹிந்தவின் செலவுகள்; இடித்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார!

Published

on

மஹிந்தவின் செலவுகள்; இடித்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார!

 இலங்கையின் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர்கள் ,மெய்க்காப்பாளர்களுடன் கூடிய வாகனங்களால் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், இன்று எந்த அமைச்சரும் மெய்க்காப்பாளர்களுடனோ அல்லது மோட்டார் வாகனப் பேரணிகளில் பயணிப்பதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஒரு ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் 700 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

களுத்துறை கட்டுகுருந்த பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுர திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இதன்போது ஜ்னாதிபதி மேலும் கூறுகையில்,

ஆயிரக்கணக்கான முப்படை காவல்துறை அதிகாரிகள் உள்ளமையால் , அவர்கள் அனைவரும் அகற்றப்பட்டு, தற்போது 60 பேர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ஏதேனும் புகார்கள் இருந்தால், பாதுகாப்புக்கு உள்ள 60 பேரும் நீக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார்.

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டின் மதிப்பிடப்பட்ட மாத வாடகை 4.6 மில்லியன் ரூபாய் என்றும், சட்டத்தின்படி, ஜனாதிபதிக்கு ஒரு வீடு அல்லது அவரது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு என்றும் ஜனாதிபதி கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு வீடு இல்லையென்றால் அவரது சம்பளத்தில் 1/3 பங்கு பெற உரிமை உண்டு. நாங்கள் ஒரு வீடு வாங்கி எங்கள் சம்பளத்தில் 1/3 ஐ செலுத்துகிறோம்.

அதாவது 30,000. அல்லது மீதமுள்ள பணத்தை செலுத்தி வாடகையிலேயே தங்கலாம் அல்லது மாத வாடகை 4.6 மில்லியன் கொடுத்து வெளியே தங்கலாம் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version