இலங்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தங்க வைப்பு!

Published

on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தங்க வைப்பு!

சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மல்கம்பிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள  18 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் தற்காலிகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(19) சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இவர்களை பார்வையிட தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம் பயணம் ஒன்றினை மேற்கொண்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் என் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version