டி.வி

ஷர்ட் காலரை தூக்கிவிட்டு கெத்தாக என்ட்ரி கொடுத்த ரயான்.! ஃபர்ஸ்ட் மீட்டே லொஸ்லியா கூடவா?

Published

on

ஷர்ட் காலரை தூக்கிவிட்டு கெத்தாக என்ட்ரி கொடுத்த ரயான்.! ஃபர்ஸ்ட் மீட்டே லொஸ்லியா கூடவா?

விஜய் டிவியில் ஆண்டு தோறும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இம்முறை இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்தது.இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட ரயான்  பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில்  முதலாவது ஆளாகவே வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். ஆனாலும் எதிர்பாராத விதமாக இறுதியாக நடந்த டபுள் எவிக்ஷனில் ரயானும் பவித்ராவும் எலிமினேட்டாகி இருந்தார்கள்.”d_i_aஇது தொடர்பில் பேசிய ரயான், இது எனக்கு நாளாந்த பயிற்சியாகவே இருந்தது. ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டேன். கடைசி நேரத்தில் தான் ஆட்டத்தை புரிந்து ஆடினேன். முத்துக்குமரன் தான் எனக்கு மோட்டிவேஷனாக இருந்தார். என்னுடைய மன நிறைவின் படி ஆடி இருக்கின்றேன்.. என தெரிவித்திருந்தார். இவருடைய எலிமினேஷன் பலரும் ஏற்றுக் கொள்ள முடியாததாக காணப்பட்டது.இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரயான் முதன் முறையாக லொஸ்லியா நடிப்பில் வெளியாக உள்ள  Mr. Housekeeping திரைப்படத்தின் பட ப்ரோமோஷனில் கலந்து கொண்டுள்ளார். இதன்போது அவர் கெத்தாக என்ட்ரி கொடுத்த வீடியோ வைரலாகி வருகின்றது.Mr. Housekeeping என்ற படத்தில் ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடித்து இருக்கின்றனர். இந்த படம் ஜனவரி 24ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷனில் ரயான் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version