உலகம்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோ நியமனம்

Published

on

Loading

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோ நியமனம்

அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ அந்நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கத்தில் ருபியோ வெளியுறவு அமைச்சர் பொறுப்பேற்பதற்கு செனட் சபை ஒருமித்த ஆதரவு அளித்துள்ளது.

Advertisement

99-0 என்ற வாக்குக் கணக்கில் அவர் வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டார்.

அமைச்சரவைக்கு திரு டிரம்ப் நியமனம் செய்தோரில் 53 வயது ருபியோதான் அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நபர். 

மேலும் சில அமைச்சர்களை உறுதிப்படுத்த இந்த வாரம் வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கியூபாவிலிருந்து குடிபுகுந்த பெற்றோருக்குப் பிறந்த ருபியோ, சீனாவைக் கடுமையாக விமர்சிப்பவர். மேலும், அவர் இஸ்ரேலுக்கு சாதகமாகப் பேசுபவரும்கூட.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version