உலகம்

துருக்கி தீ விபத்து – உயிரிழப்பு 66 ஆக உயர்வு

Published

on

துருக்கி தீ விபத்து – உயிரிழப்பு 66 ஆக உயர்வு

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. 

இந்நிலையில், இந்த ஓட்டலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதில் சிலர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version