இலங்கை

பொலிஸாருடன் முரண்பட்ட அருச்சுனா எம்பி மீது விசாரணை

Published

on

பொலிஸாருடன் முரண்பட்ட அருச்சுனா எம்பி மீது விசாரணை

பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன் , போக்குவரத்துச் சட்டத்தை மீறியமை தொடர்பில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை (21) அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததற்காக எம்.பியின் வாகனம் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அர்ச்சுனா இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்துச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் கொண்டு வரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

அதேவேளை மத நல்லிணக்கத்தை தூண்டும் வகையில் எம்.பி ஏதேனும் கருத்து தெரிவித்தாரா என்பதைக் கண்டறியவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version