சினிமா

“இந்த லவ்க்கு நான் உண்மையா இருப்பன்” வைரலாகும் பிக்போஸ் பவித்ராவின் இன்ஸ்டா பதிவு..

Published

on

“இந்த லவ்க்கு நான் உண்மையா இருப்பன்” வைரலாகும் பிக்போஸ் பவித்ராவின் இன்ஸ்டா பதிவு..

பிக்போஸ் சீசன் 8 முடிந்து சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அனைவரும் பல மீடியாக்களில் நேர்காணல் செய்வதும் நன்றி தெரிவித்து வீடியோக்களை பதிவிடுவதும் வெற்றியினை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.அந்தவகையில் இந்த சீஸனின் 2nd ரன்னரான பவித்ரா ஜெனனி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.மிகவும் நேர்மையாக இறுதிவரை விளையாடி வெளியேறிய இவர் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது பவித்ரா மக்களுக்கு நன்றி கூறும் விதமாக ஒரு இன்ஸ்டா பதிவினை போட்டுள்ளார்.குறித்த பதிவில் “இந்த பிக் பாஸ் சீசன் 8 முழுவதும் நீங்கள் எனக்கு அளித்து வரும் அபரிமிதமான ஆதரவிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது, அன்பும் பரவசமும் நிறைந்த பயணம். என் வாழ்க்கையில் நீங்கள் செய்த அனைத்திற்கும் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி.. ” என எழுதியுள்ளார்.மற்றும் “எங்கள மாதிரி இருக்கிறவங்கள புரிஞ்சிகிட்டு இவ்வளவு நாளா ஓட்டு போட்டதற்கு ஒரு பெரிய நன்றி இவ்வளவு தூரம் நான் வந்ததற்கு ஒரு பெரிய காரணம் நீங்க எல்லாரும் தான் இதை நான் எப்புடி பாக்கிறேன்னா என்னை மாதிரி இருக்கிற மக்கள் எல்லாருக்கும் கிடைச்ச விக்டறியா தான் அதனால தான் எங்களால இவ்வளவு தூரம் வரமுடிஞ்சிச்சு எனக்கு சப்போட் பண்ண எல்லாருக்கும் பெரிய பெரிய நன்றி “என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version