சினிமா

இயக்குநருக்கு சூர்யா விடுத்த கோரிக்கை..! படத்தில் இருந்து விலகியமைக்கான காரணம் இதுதான்..

Published

on

இயக்குநருக்கு சூர்யா விடுத்த கோரிக்கை..! படத்தில் இருந்து விலகியமைக்கான காரணம் இதுதான்..

மின்னலே ,வாரணம் ஆயிரம் ,காக்க காக்க ,என்னை அறிந்தால் ,விண்ணை தாண்டி வருவாயா போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில்  விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரங்கள் திரைப்படம் பல ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கின்றது.இந்நிலையில் ஆரம்பத்தில் இப் படத்தில் நடிப்பதற்கு சூர்யாவிடம் கதை சொல்லிய கெளதம் மேனன் கதையை கேட்டு படத்தில் நடிப்பதற்கு சூர்யா ஒத்துக்கொண்ட பின்னர் இப் படத்தில் இருந்து விலகியதாகவும் “துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடித்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்; இப் படத்தில் நடிப்பது குறித்து நிறைய நாளா பேசினோம் கடைசியில் வேணாம்னு சொல்லிட்டார்.இந்த படம் failure ஆன கூட எனக்கு தான் நஷ்டம் உங்களுக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் வந்து கொண்டு தானே இருக்கும் எனவும் சொல்லி பார்த்தேன் அவர் முடியாதென்றே சொல்லிட்டார்” என மிகவும் open ஆக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.இது தொடர்பில் சூர்யா தரப்பில் இருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.அதாவது இப் படத்தில் கெளதம் மேனனை சூர்யா இப் படத்தின் தயாரிப்பினை வேறொருவரை வைத்து தயாரிக்க சொன்னதாகவும் அவர் அதற்கு ஒத்துப்போகாமையினாலேயே சூர்யா இப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version