இந்தியா
தினமும் 145 நிமிடங்கள் மூடப்படும் டெல்லி விமான நிலையம்!
தினமும் 145 நிமிடங்கள் மூடப்படும் டெல்லி விமான நிலையம்!
இந்தியாவின் 76ஆவது குடியரசுத்தினம் எதிர்வரும் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை டெல்லி விமான நிலையத்தை தினமும் 2மணி நேரம் 25 நிமிடங்களுக்கு மூடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 8 நாட்களில் குறைந்தது 1,336 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.