பொழுதுபோக்கு

பரபரக்கும் சீரியல்.. கூலாக ‘சவதீகா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்த விஜய் டி.வி நடிகைகள்

Published

on

பரபரக்கும் சீரியல்.. கூலாக ‘சவதீகா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்த விஜய் டி.வி நடிகைகள்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வியில் சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  அதிகம் வெளியில் தெரியாத புது முகங்கள் கொண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் இப்போது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தினமும் அடுத்து என்ன நடக்குமோ, உண்மை என்னவாக இருக்கும், ட்விஸ்ட் இருக்கா என்பது போல் பரபரப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ரோகிணி ஏதோ பொய் சொல்லி உள்ளார். இதை கண்டுபிடிக்கும் முயற்சியில் முத்து இறங்கிவிட்டார். இப்போது அவர் குடும்பமாக மலேசியா போலாம் என்ற வெடிகுண்டை போட ரோகிணி கடுப்பாகி விடுகிறார்.ஆனால் அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க தனது அப்பாவே இறந்துவிட்டார் என ட்விஸ்ட் கொடுக்கிறார். இப்படி பரபரப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள் அஜித்தின் ‘சவதீகா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சவதீகா’ பாடலுக்கு மீனா, ஸ்ருதி நடனம் ஆடி ரீல்ஸ் செய்துள்ளனர். இது தற்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version