இலங்கை

யாழ் ஆவரங்காலில் விபத்து – உயிருக்கு போராடும் இரு இளைஞர்கள்!

Published

on

யாழ் ஆவரங்காலில் விபத்து – உயிருக்கு போராடும் இரு இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த சம்பவத்தில் நடந்து சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கை, கால், முறிவடைந்த நிலையிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இருவரும் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன் (வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Advertisement

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனை பொலிஸார் தெரிவித்தனர்.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version