இலங்கை

ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை ; நாடாளுமன்றத்தில் பட்டாசாய் வெடித்த அருச்சுனா எம்.பி!

Published

on

ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை ; நாடாளுமன்றத்தில் பட்டாசாய் வெடித்த அருச்சுனா எம்.பி!

இன்று முதல் ஆளும் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமை மீறல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

Advertisement

36 நாட்களின் பின்னர் இன்று நாடாளுமன்றத்தில் பேச சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கம் நீதி வழங்கும் என எதிர்பார்த்ததாகவும் ஆனால் எதுவுமே நடக்கவில்லை எனவும் அருச்சுனா எம்.பி தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்றத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனவுக்குப் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல என்று , அது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு என்றும் பதில் வழங்கினார்.

தாம் அடிக்கடி சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும், உறுப்பினர் பேசும் உரிமைக்காக அரசாங்கம் எழுந்து நிற்கும் எனவும் பிமல் ரத்நாயக்க மஹதா தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேவேளை, எதிர்க்கட்சி சார்பில் பதிலளித்த கயந்த கருணாதிலக்க, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் பேசி நியாயமான நேரத்தையும், பேசுவதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அந்த செயற்பாடுகளுக்கு இணங்கும் பட்சத்தில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் திறமை அவருக்கு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய அர்ச்சுனா கூறுகையில்,

Advertisement

இப்போதிலிருந்து நான் இந்த அரசின் எந்தவொரு செயலுக்கும் ஆதரவு வழங்க மாட்டேன்.. தமிழ் மக்கள் NPP அரசாங்கத்தினை வரவேற்றனர். அதில் நானும் ஒருவன்.

ஆனால் எல்லாம் வேஷம்.. சிங்கள எம்பிக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு இன்னொரு சட்டமா?

இம்முறை நான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அதற்கு முன் நான் வைத்தியராக இருந்தேன்.

Advertisement

ஊடகங்களில் எனது நடத்தை குறித்து ஏதேனும் முறைப்பாடுகள் வந்துள்ளதா? அரசியலுக்கு வருவதற்கு முன் ஒரு வழக்காவது ஏன் மீது இருந்ததா? தேடிப்பாருங்கள்.

ஏன் எனக்கு நேரத்தினை ஒதுக்கித் தருவதில்லை? என்னை ஏன் புலி புலி என்று கூறுகிறீர்கள்? நான் புலியாக இருந்தால் என்னை கைது செய்யுங்கள்.. இல்லையென்றால் சுட்டுத்தள்ளுங்கள்.

நீங்கள் கொலை செய்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த அரசு முன்னர் கொலையாளிகள் என்பதை மறந்துவிட வேண்டாம் .

Advertisement

இந்த அரசு கொலைகார அரசு மன்னார் நீதிமன்றுக்கு முன்பாக இருவர் கொலை செய்யப்பட்டார்கள்.

தெஹிவளையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.. என்னையும் கொலை செய்தால் அதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் கூறினார்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version