இலங்கை

இணையத்தில் வைரலான காந்தக் கண்ணழகி மோனலிசா; பதறிப்போன பெற்றோகள்!

Published

on

இணையத்தில் வைரலான காந்தக் கண்ணழகி மோனலிசா; பதறிப்போன பெற்றோகள்!

  மகா கும்பமேளா விழாவில் பாசி, ருத்ராட்ச மாலை விற்கவந்த யுவதி ஒருவர் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

தன் வசீகர தோற்றத்தால் 16 வயதே ஆன மோனலிசா தான் இணையங்களில் தற்போது ரெண்டாகி உள்ளார்.

Advertisement

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படும்.

ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும்.
மகா கும்பமேளா திருவிழாவில் முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் என பலரும் கலந்துகொள்வார்கள்.

இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநில இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே, மகா கும்பமேளா விழாவில் பாசி, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றைத் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விற்று வந்தார்.

Advertisement

கும்பமேளாவில் கூட்டம் கூடும், நல்ல வருமானம் கிடைக்கும் என நினைத்திருந்த மோனலிசாவிற்கு கேட்டது ஒன்று. ஆனால் கிடைத்தது ஒன்று.

பாபாக்கள், அகோரிகளுக்கு நடுவே மோனலிசா பாசி மாலைகள் விற்றதை யூடியூபர் ஒருவர் ரீல்ஸ் எடுத்து அப்லோடு செய்துள்ளார். யார் இவர்? எங்கிருக்கிறார்? என பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கினர்.

கையில் கேமிராவுடன் தன்னை தேடி பலரும் அலைந்ததால் புன்னகையில் மூழ்கிய மோனலிசாவிற்கு நாளடைவில் அதுவே ஆபத்தாக மாறியது.

Advertisement

மோனலிசாவை சுதந்திரமாக சுற்ற விடாமல். சுற்றி வளைத்து செல்பி எடுத்து டார்ச்சர் செய்தனர்.

இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளான மோனலிசா கருப்பு நிற மாஸ்க்கை அணிய தொடங்கினார். இருப்பினும் அவரது கண்கள் அவரை காட்டி கொடுக்காமல் மறைத்து வைக்க, தவறிவிட்டது.

மோனலிசாவை மட்டுமல்லாது அவரை போல பாசி மாலை விற்கும் பல பெண்களையும் அது சிரமத்திற்கு உள்ளாக்கியதுடன் முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்களும் இடம்பெற்றது. இதனால் மோனலிசாவின் குடும்பத்தினர் உடைந்து போனார்கள்.

Advertisement

இதனால் பாசி மாலை விற்க செல்லும் போது மோனலிசாவிற்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக்கும் அளவிற்குச் சென்றது.

இதனையடுத்து மகளின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்து என்பதை உணர்ந்தவர்கள், அவரை இரவோடு இரவாக பேருந்தில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள்.

இதனிடையே பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் தயாராக உள்ள அடுத்த படத்தில் 16 வயதே ஆன மோனலிசா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version