இலங்கை
இந்த ஒரு சிறிய கல்லில் இத்தனை ரகசியமா?
இந்த ஒரு சிறிய கல்லில் இத்தனை ரகசியமா?
படிகார கல்லில் ஏராளமான மருத்துவ பண்புகளும் மற்றும் நன்மைகளும் நிறைந்துள்ளதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இந்த படிகார கல்லின் சிறப்பம்சங்கள் என்னனென நாம் இங்கு பார்ப்போம்.
இந்த படிகார கற்களைப் பொடியாக்கி சீயக்காய் அல்லது ஷாம்புடன் சேர்த்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு குறையும் என்று சொல்லப்படுகிறது. தலையில் ஏற்படும் அரிப்புகள் இந்த படிகார கற்கள் சரிசெய்யும் என்று கூறப்படுகிறது.
தினமும் இரவில் தூங்கவிடாமல் கெட்ட கனவு வந்தால் நீங்கள் இந்த படிகார கற்களைக் கருப்பு துணியில் கட்டி தலையணையில் வைத்துத் தூங்கலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படித் தூங்குவதால் கெட்ட கனவுகள் வராதாம்.
பாதத்தில் விரல் புண் ஏற்பட்டால் இந்த படிகார கற்களை வைத்து மருத்து வைத்தியம் பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. கெட்ட கிருமிகள் வளர்ச்சியை இது முற்றிலும் தடுக்கிறது.