இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார்!

Published

on

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

இதற்கமைய  பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட சசிகலா ரவிராஜ், அ.உமாகரன், சி.மயூரன், த.கிருஸ்ணானந், ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உட்பட 09 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். ஏனையவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version