இலங்கை

மனைவியை கொலை செய்து குக்கரில் வேகவைத்த கணவன்; பகீர் தகவல்

Published

on

மனைவியை கொலை செய்து குக்கரில் வேகவைத்த கணவன்; பகீர் தகவல்

  இந்தியாவின் தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன், எலும்புகளை ஏரியில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி. இவர் வெங்கட மாதவி என்பவரை திருமணம் செய்து 13 ஆண்டுகளாக தெலங்கானாவின் மேட்சலில் வசித்துள்ளார்.

Advertisement

இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ள நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குருமூர்த்தி, அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி குழந்தைகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய குருமூர்த்தி, கடந்த 16 ஆம் தேதி மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

மாதவியின் பெற்றோர் போன் செய்த போது அவர் பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் மகளை காணவில்லை என மீர்பேட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

இது தொடர்பாக குருமூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த குருமூர்த்தி, உடலை வெட்டி துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்துள்ளார்.

பின்னர் யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என கற்றதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

அந்த , சோதனை முயற்சியாக தெரு நாய் ஒன்றை கொன்று குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாயில் கரைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதே பாணியில் தனது மனைவியின் உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து பொடிப்பொடியாக்கி, கால்வாயில் கரைத்ததோடு, மீதம் உள்ள எலும்புகளை ஏரியில் வீசியதாகவும் முன்னாள் ராணுவ வீரர் கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்திட்யுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version