இலங்கை

மிகச்சிறந்த காலை உணவு எது என உங்களுக்கு தெரியுமா?

Published

on

மிகச்சிறந்த காலை உணவு எது என உங்களுக்கு தெரியுமா?

காலை உணவு நமது உணவுமுறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காலையில் நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாக, இருக்க வேண்டும்.

காலை உணவு சாப்பிட்டால் தான் நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கவும், வாழ்க்கை முறை நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும் உதவும். 

Advertisement

ஓட்ஸ் ஒரு மிகச்சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது  ஒட்ஸ் சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் எவை என நாம் இங்கு பார்ப்போம்.

ஓட்மீலில் பீட்டா-குளுக்கன் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஓட்மீலை தொடர்ந்து உட்கொள்வது கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவியாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஓட்மீலில் செலினியம் மற்றும் தாமிரம் போன்ற சில தாதுக்கள் உள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இந்த தாதுக்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை வலுப்படுத்துவதாக ஹெல்த் ரிப்போர்ட்டர் கூறுகிறது. இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. குளிர்காலத்தில் சளி மற்றும் பிற பருவகால நோய்களைத் தடுக்க ஓட்ஸ் சாப்பிடுவது உதவியாக இருக்கும்.

Advertisement

ஓட்ஸ் ஜீரணிக்க மிகவும் எளிதானது. இது வயிற்றுக்கும் நன்மை பயக்கும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் செரிமான செயல்முறையை ஓட்ஸ் மேம்படுத்துகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version