இலங்கை
COPD நோய் குறித்து மருத்துவர்களின் அறிவுறுத்தல்!
COPD நோய் குறித்து மருத்துவர்களின் அறிவுறுத்தல்!
40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக சுவாச வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய் குறித்து சமூகத்தில் சரியான புரிதல் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உலகில் நிகழும் இறப்புக்களுக்கான காரணங்களில் இந்த நோய் 7வது இடத்தில் உள்ளது.”
உங்களுக்கு ஆஸ்துமா நோய் இருந்தாலும், நீங்கள் மருந்து எடுத்துக்கொள்வதில்லை.
இதனால் 20 அல்லது 30 வருடங்களில், நீங்கள் ஒரு COPD நோயாளியாக என்னிடம் வருவீர்கள். சிகரெட் புகை பயன்படுத்துகிறீர்கள்.
இதனால் உங்கள் நுரையீரல் காலப்போக்கில் சேதமடைகிறது என்பது உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்கு 45 வயது ஆகும்போது, நீங்கள் மருத்துவர்களைத் தேடத் தொடங்குவீர்கள்.
அப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போல் உணர்வீர்கள்.
மலை பங்கான பகுதியில் ஏறும் போது அது உணரப்படும்.
2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10% பேருக்கு இது உள்ளது.
“இது முதலில் கண்டுபிடிக்கப்படாததற்குக் காரணம், அதைப் பற்றிய புரிதல் இல்லாததே.” என்றார்.
இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது,
“இதைத் தடுக்க வேண்டுமானால் நாம் எங்கு வேலை செய்தாலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி, தேவையற்ற காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாமல் இருப்பதன் மூலமும், முகக்கவசங்களை அணிவதன் மூலமும் இந்த நோயைத் தடுக்கலாம்.”
பெற்றோருக்கு இந்த COPD நோய் இருப்பது கண்டறியப்படாமலேயே உள்ளது. நடக்கவே கஷ்டமா இருக்கும்.
பின்னர் முச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். லேசான தடிமன் ஏற்பட்டாலும் அவர்களுக்கு கடினமாக இருக்கும்.
ஒரே சிகிச்சை இன்ஹேலர் மட்டுமே. வேறொன்றுமில்லை.
COPD என்பது ஆஸ்துமாவிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்பட்ட நோயாகும். “அதனால்தான் இன்ஹேலரை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.