சினிமா

என்ன இதுக்குள்ள ஓய்வு அறிவிச்சிட்டாங்க, கல்யாணமா இருக்குமோ?. புலம்பவிட்ட ராஷ்மிகா மந்தனா

Published

on

என்ன இதுக்குள்ள ஓய்வு அறிவிச்சிட்டாங்க, கல்யாணமா இருக்குமோ?. புலம்பவிட்ட ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதைப் பற்றி பேசி பெரியா அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

கடந்த வருடத்தில் மூன்று மெகா வசூல் படங்களில் நடித்தவர் ராஷ்மிகா. வாரிசு, அனிமல், புஷ்பா என மொத்தமாய் இவர் நடித்த படங்களின் வசூல் 3000 கோடியை தாண்டும்.

Advertisement

ஆரம்ப காலத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர். அதன் பின்னர் கியூட் என நினைத்து இவர் செய்த சில விஷயங்கள் ரசிகர்களையே கடுப்படையச் செய்தது.

இருந்தாலும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆகிவிட்டார். டாப் ஹீரோக்களின் படங்கள் என்றாலே ராஷ்மிகா தான் கதாநாயகி என்று ஆகிவிட்டது.

புஷ்பா பட விழாவின் போது விஜய தேவர் கொண்டா உடனான காதலை உறுதி செய்தார் என்றும் பேசப்பட்டது. ராஷ்மிகாவுக்கு அடுத்து சாவா என்னும் பிரம்மாண்ட படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Advertisement

இந்த பட விழாவின் போது தான் ராஷ்மிகா தன்னுடைய ஓய்வு குறித்து பேசி இருக்கிறார். அதாவது இந்த படத்தில் அவர் நடித்த கேரக்டர் அவருக்கு ரொம்பவும் மன திருப்தியை கொடுத்து விட்டதாம்.

இந்த கேரக்டரில் நடித்த பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனக்கு கவலையில்லை என்று சொல்லி இருக்கிறார்.

படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற செய்ய இவர் சொல்லிய இந்த விஷயம் தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஓய்வு பற்றி பேசுகிறார் என்றால் ஒரு வேளை திருமணம் முடிவாகிவிட்டதோ என்றெல்லாம் சந்தேக கேள்விகள் கிளம்பி இருக்கிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version