இலங்கை

பாடசாலை செல்லும் 7 லட்சம் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Published

on

பாடசாலை செல்லும் 7 லட்சம் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

 250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.

இதற்கமைய சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படும் எனப் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Advertisement

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அரச தரப்பு எம்.பி.யான ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பாடசாலைகளில் காணப்படும் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு சமமான வளங்களை பகிர்ந்தளித்தால் பாடசாலைகளுக்கு இடையில் போட்டித்தன்மை ஏற்படாது

Advertisement

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் நலன்புரித் திட்டங்களை விரிவுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 250 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.இதற்கமைய சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படும்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

Advertisement

நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே வெகுவிரைவில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்

கல்வி மறுசீரமைப்புக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. நவீன உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி கொள்கைத் திட்டம் அமுல்படுத்தப்படும்.

Advertisement

பரீட்சை முறைமைக்கு பதிலாக மாணவர்களுக்கு இணக்கமானதாக அமையும் கல்வி முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்றார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version