சினிமா

பிக் பாஸில் கலந்து கொள்ளாதது ஏன்? அர்னவ் மனைவி உடைத்த ரகசியம்

Published

on

பிக் பாஸில் கலந்து கொள்ளாதது ஏன்? அர்னவ் மனைவி உடைத்த ரகசியம்

முதன்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் நிறைய விஷயங்கள் ஸ்பெஷல் ஆக இருந்தது. எந்த சீசனிலும் இல்லாத அளவு சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டது என இப்படி நிறைய விஷயங்கள் கூறலாம்.ஒருவழியாக 100 நாட்கள் மக்கள் பார்த்து வந்த இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி முடிவுக்கும் வந்துவிட்டது. இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அர்னவ்-அன்ஷிதா இடையே காதல் இருப்பதாக செய்திகள் உலா வந்தது.இதன் காரணமாக அர்னவ்-அன்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள் என்ற பேச்சு வந்தவுடனே அர்னவ் மனைவி திவ்யாவும் கலந்துகொள்கிறார் என கூறப்பட்டது.இது குறித்து அண்மையில் திவ்யாவிடம் இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு, “பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் ஏன் நீங்கள் வரவில்லை என்று பலர் கேட்டனர்.அவர்களுக்கு விளக்கம் கொடுக்க நினைக்கிறேன். நான் கலந்துகொள்ளவே முதலில் நினைக்கவில்லை, அதற்கு முக்கிய காரணம் எனக்கு சிறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.அவளை வைத்துக் கொண்டு படப்பிடிப்பே செல்ல முடியவில்லை, படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் என்னை தேடுவார்.குழந்தையை விட்டுவிட்டு என்னால் 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க முடியாது. அதேபோல் நான் செவ்வந்தி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சீரியலில் இருந்து என்னால் விலக முடியாது” என கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version