சினிமா

பேய் படம்ன்னா அல்வா சாப்பிடுவது போல் என்ஜாய் பண்றவங்களா?. அப்போ இந்த 6 படத்தை மிஸ் பண்ணாம பாத்துடுங்க

Published

on

பேய் படம்ன்னா அல்வா சாப்பிடுவது போல் என்ஜாய் பண்றவங்களா?. அப்போ இந்த 6 படத்தை மிஸ் பண்ணாம பாத்துடுங்க

பேய் படங்களை பயந்து கொண்டே பார்ப்பது சிலருக்கு அலாதி பிரியமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இந்த ஆறு படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.

மாதவன் நடிப்பில் வெளியான படம் யாவரும் நலம். உறக்க கத்தும் பேய், அலற வைக்கும் சத்தம் என எதுவுமே இருக்காது.

Advertisement

ஒரு டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலை வைத்தே இயக்குனர் மிரட்டி இருப்பார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் குற்றவாளி யார் என தெரியவரும் நேரமெல்லாம் உடம்பில் மெய் சிலிர்த்து விடும்.

பிரித்திவிராஜ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ரிலீசான படம் எஸ்ரா. கடைசி யூதர் ஒருவரின் மரணத்திலிருந்து தொடங்குகிறது இந்த படம்.

பழங்கால விற்பனையாளர் ஒருவர் யூதர் தங்கி இருந்த இடத்தில் இருக்கும் பெட்டி ஒன்றை திருடி எடுத்து வருகிறார். அதன் பின்னர் நடக்கும் மர்மம் தான் படத்தின் திரைக்கதை.

Advertisement

செய்வினை மற்றும் நரபலியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மசோதா. இந்த படத்தில் சங்கீதா முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார்.

கணவனை விட்டு பிரிந்து தன்னுடைய மகளுடன் சங்கீதா க்ரிஷ் ஒரு அப்பார்ட்மெண்டில் குடி பெயர்வார். அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள் தான் இந்த படத்தின் கதை.

அருந்ததி படத்தை சில வருடங்களுக்கு முன் பார்த்த ஞாபகம் சிலருக்கு இருக்கும். ஆனால் இந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் ஒரு வித பயம் தொற்றிக் கொள்ளும்.

Advertisement

அனுஷ்காவின் கம்பீரம், சோனு சூட்டின் மிருகத்தனம் இரண்டையும் மீண்டும் ஒரு முறை பார்த்து சிலாகித்துக் கொள்ளுங்கள்.

சைனீஸ் பேய் எந்த அளவுக்கு மிரட்டும் என்பதை காட்டிய படம் தான் அவள். சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்கள்.

இந்த படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சி, எந்த பேய் தீமை செய்ய வந்திருக்கிறது, எந்த பேய் காப்பாற்ற வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் தருணம் படத்தின் அடிபோலியான சீன்.

Advertisement

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருக்கை முனையை கொடுத்த படம் பீட்சா. கடைசிவரை பேய் இருப்பது போலவே மிரட்டி இருப்பார்கள்.

கிளைமாக்ஸ் சீனுக்கு முன்னாடி தான் இது நாடகம் என்று தெரியும். நாடகத்தை முடித்த வெற்றி களிப்பில் பீட்சா டெலிவரி செய்யப் போகும் விஜய் சேதுபதி நிஜமாகவே பேய்யிடம் மாட்டிக் கொள்வது தான் படம் பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைத்திருக்கும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version