இலங்கை

பொலிஸ் உத்தரவை மீறி சென்ற கார் மீது துப்பாக்கிசூடு

Published

on

பொலிஸ் உத்தரவை மீறி சென்ற கார் மீது துப்பாக்கிசூடு

  கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது.

Advertisement

இதன்போதே உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதுடன், சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version