சினிமா

மிஸ்கின் கதைத்தது தப்பா? பதிலடி கொடுத்த முக்கிய பிரபலம்!

Published

on

மிஸ்கின் கதைத்தது தப்பா? பதிலடி கொடுத்த முக்கிய பிரபலம்!

இயக்குநர் மிஸ்கின் சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா வீடியோ லாஞ்சில் இன்ஸ்டா பிரபலம் திவாகர் பற்றி   கதைத்திருந்தார். இது குறித்து திவாகர் கண்டித்த நிலையில் இந்த விடயம் தற்போது பேசுபொருளானது. இது குறித்து பலரும் பேசிவரும் நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் “மிஸ்கின் ஒரு படைப்பாளி ஆனால் அவர் இப்படி கதைப்பது முதல் தடவை அல்ல” என்று கூறியிருந்தார்.பாட்டில் ராதா ஆடியோ  லாஞ்சில் இயக்குனர் மிஸ்கின் பேசிய விவகாரம் குறித்து பிரபலம் ஒருவர் பேசியது சமீபத்தில் வைரல் ஆகிவருகின்றது. அவர் பேசுகையில் “திவாகர் பற்றி கதைக்கும் போது கொஞ்சம் கூடுதலான கெட்டவார்த்தை இருந்ததாகவும் அந்த வார்த்தைகள் பெரிதும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளாக காணப்படுகின்றதாகவும் கூறப்பட்டது.ஆனால் மிஸ்கின் இயல்பாகவே எனெர்ஜிடிக்காக கதைப்பவர். அவர் அன்று திவாகர் பற்றி கதைக்கும் போது இயல்பாகவே கதைத்தார் “. மிஸ்கின் கதைத்த வீடியோ பல மக்களால் பார்க்கப்பட்டாலும் அவர்கள் அனைவரும் அவரை தவறாக புரிந்து கொண்டார்கள். அவர் அந்த வீடியோவில் பல நல்ல விடயங்கள் பற்றி கதைத்திருந்தார்.மேலும் “குறிப்பாக, தற்போதைய குழந்தைகளது திறமையை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு வளர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மிஸ்கின் கதைத்தது பிடிக்காதவர்கள் அந்த வீடியோவை பார்க்காமல் செல்லலாம்” என்று கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version