இலங்கை
யாழில் மூன்று பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்
யாழில் மூன்று பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட இளம் தாயான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு நேற்று முன் தினம் (22) மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.