இலங்கை

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழு அமைக்க தீர்மானம் – தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Published

on

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழு அமைக்க தீர்மானம் – தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (24) வடக்கு,கிழக்கு எதிர்க்கட்சி தமிழ்,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

 இக் கலந்துரையாடலில் வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் 12பேரும், தேசிய மீனவஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மற்றும், மன்னார் இணைப்பாளர்களும் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்திற்கு வருகைதந்து வடமாகாண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட, பதினொரு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

 இக்கலந்துரையாடலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், உள்ளூர் மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.
அத்தோடு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப்படகுகளின் இழுவைமடித் தொழில்களால் வடபகுதியைச் சேர்ந்த சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்புகின்றமைதொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டது.

 இந் நிலையிலேயே வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழுஒன்றை அமைப்பதென இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version