சினிமா

விஜய், தனுஷ் பட நடிகரை காவு கொண்ட மஞ்சள் காமாலை.! தமிழ் சினிமாவுக்கு பேரதிர்ச்சி

Published

on

விஜய், தனுஷ் பட நடிகரை காவு கொண்ட மஞ்சள் காமாலை.! தமிழ் சினிமாவுக்கு பேரதிர்ச்சி

தமிழ் சினிமாவில் வெளியான விக்ரம் வேதா, புதுப்பேட்டை, பிகில், தெறி உள்ள பல படங்களில் துணை நடிகராக நடித்தவர் தான் ஜெயசீலன். இவர் ஹீரோ அல்லது வில்லன் கேங்ஸ்டராக காணப்படும் படங்களில் தவறாமல் இடம்பிடிப்பார்.விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய் இருந்த குரூப்பில் இருக்கும் அடியாட்களில் ஒருவராக ஜெயசீலன் நடித்திருப்பார். மேலும் புதுப்பேட்டை படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் நண்பராக காணப்பட்டுள்ளார். இதனால் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா படத்திலும் நடித்துள்ளார்.d_i_aஇந்த நிலையில், நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழக்கும் போது அவருக்கு 40 வயது தான். இவருடைய மரணம் தற்போது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் ஜெயசீலன், சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.தற்போது இவருடைய இறுதிச் சடங்குகள் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ஜெயசீலன் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version