சினிமா

இதுவரை பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள்.. அஜித் நிஜமாவே அதிர்ஷ்டக்காரர் தான்!

Published

on

இதுவரை பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள்.. அஜித் நிஜமாவே அதிர்ஷ்டக்காரர் தான்!

நடிகர் அஜித் குமாருக்கு நேற்று பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

139 பேர் விருது வாங்க இருக்கும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லி துணி கடையின் உரிமையாளர், ரவிச்சந்தர் அஸ்வின் போன்றோருக்கும் இந்த விருதை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

வரும் மார்ச் மாதத்திற்கு பிரதமர் முன்னிலையில் குடியரசு தலைவர் கையால் இந்த விருதுகளை வாங்குவார்கள்.

விருது அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித் குமார் தன்னுடைய நன்றி கடிதத்தையும் வெளியிட்டு இருந்தார்.

நேற்றிலிருந்து அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித்துக்கு முன்பு பத்மபூஷன் விருது வாங்கிய நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

முதன் முதலில் பத்மபூஷன் விருது வாங்கியது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். சிவாஜிக்கு 1984 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

சிவாஜிக்கு பிறகு இந்த விருதை வாங்கியது நடிகர் ரஜினிகாந்த் தான். இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

ரஜினியை தொடர்ந்து கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவருக்கு கடந்த வருடம் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. வருடம் அஜித் குமார் இந்த விருதை வாங்கி இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version