இலங்கை

கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

Published

on

கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பாய்-கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த 58 வயதான விவசாய ஆராய்ச்சியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனடா பல்கலைக்கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக கடமை புரியும் இவர், கடந்த 13 ஆம் திகதி கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பல்கலைக்கழக விரிவுரையாளருடன் ஜூம் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

Advertisement

இதனையடுத்து அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version