பொழுதுபோக்கு

கல்யாண புகைப்படம் பகிர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை… குவியும் ரசிகர்கள் வாழ்த்து

Published

on

கல்யாண புகைப்படம் பகிர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை… குவியும் ரசிகர்கள் வாழ்த்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சரண்யா துரோடி தன்னுடைய கணவரோடு எடுத்த திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.அவருக்கு திருமணமாகி 4வது ஆண்டு திருமணவிழாவை முன்னிட்டு டஹ்னது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.  A post shared by Rahul Sudarsan (@rahul__sudharshan)பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தது. அந்த சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடிப்பவர் தான் சரண்யா துரோடி.  இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார்.அதற்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் கதாநாயகியாக மாறி இருந்தார். முதல் சீரியலில் டாக்டராகவும் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாகவும் மாறிய சரண்யா அடுத்து நடித்த சீரியல்கள் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதனாலயே சில வருடங்களாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் விஜய் டிவியில் சரண்யா ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் சரண்யா நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு திருமணம் முடிந்தது பலருக்கும் தெரியாது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய நான்காவது திருமண நாள் என்று கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதுவும் திருமண கோலத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் முதல்மறையாக வெளியாகி இருந்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகின.  நான்கு வருடத்திற்கு முன்பே சரண்யாவிற்கு திருமணம் ஆகி இருந்தாலும் எந்த இடத்திலும் தன்னுடைய திருமண புகைப்படத்தை இவர் பகிர்ந்து கொள்ளவில்லை. முதல் முறையாக தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். சரண்யாவிற்கும் அவருடைய கணவர் ராகுல் சுதர்சனுக்கும் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version