பொழுதுபோக்கு

கேரக்டரில் திருப்தி இல்லை: சுயமரியாதை முக்கியம்; மௌனம் பேசியதே சீரியல் நடிகை திடீர் விலகல்!

Published

on

கேரக்டரில் திருப்தி இல்லை: சுயமரியாதை முக்கியம்; மௌனம் பேசியதே சீரியல் நடிகை திடீர் விலகல்!

சமீபத்தில் ஜீ தமிழில் தொடங்கிய மௌனம் பேசியதே சீரியலில் நடித்து வந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளும் சீரியல்களும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சேனலும் தொடர்ந்து புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் வெளியான, வள்ளியின் வேலன், நெஞ்சத்தை கிள்ளாதே என புதுப்புது சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வரிசையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மௌனம் பேசியதே. அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன்,  இரா அகர்வால், சத்யா உட்பட பலர் இந்த முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும், விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் திருமணம் நடக்க இரண்டு ஜோடியும் ஒரு பேருந்தில் பயணம் செய்கின்றனர். இந்த பயணத்தின் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, ஜோடி மாறி வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் அடுத்து நடக்க போவது என்ன? அவர்கள் சந்திக்க போகும் சவால்கள் என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் இருந்து தான் விலகுதாக நடிகை ஜோவிதா லிவிங்ஸ்ட்ன்  அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், என்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், மௌனம் பேசியதே படத்திலிருந்து நான் விரைவில் விலகப் போகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறிது காலமாக, சீரியலின் கதைக்களத்தின்படி, எனது நடிப்பு கேரக்டர், தொழில் தேர்வுகளையும் மாற்றிக்கொள்ள விரும்பினேன்.துளசி வேடத்தில் எனது நடிப்பது எனக்கு அதிக திருப்தியைத் தரவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் அது சுயநலமாகவும், நீண்டகால மனச்சோர்வுடனும், நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானதாகவும் மாறியது. ஒரு முக்கிய கதாபாத்திரமாக, இவ்வளவு சுயநலமான கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை.  மேலும் பலருக்கு நான் பல மாதங்களாக சீரியலில் இடைவிடாமல் நடித்து வருகிறேன்.A post shared by Jovita L (@jovitaalivingston)எனக்கு வாழ்க்கை வாழ்வது என்பது நேர்மை மற்றும் சுயமரியாதை பற்றியது, அந்த குணங்களைப் பெறவும் அந்த நபராக இருக்கவும் நான் மிகவும் முயற்சித்தேன், ஆனால் நான் என்னைப் பற்றி மிகவும் ஏமாற்றமடைந்தேன், சமீப காலங்களில் எனது கொள்கையில் இருந்து நழுவ தொடங்கியுள்ளேன். அதனால்தான் நான் மௌனம் பேசியதே சீரியலில் இருந்து விலகுகிறேன். இதுவரை நீங்கள் அனைவரும் எனக்கு அளித்து வரும் அன்புக்கு மிக்க நன்றி. நிச்சயமாக விரைவில் மற்றொரு திட்டத்துடன் வருவேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version