இலங்கை

சீரற்ற வானிலையால் 27,751 குடும்பங்கள் பாதிப்பு!

Published

on

சீரற்ற வானிலையால் 27,751 குடும்பங்கள் பாதிப்பு!

கடந்த 13 ஆம் திகதி  முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 மேல் மாகாணம் தவிர அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

 அண்மைய நாட்களில் பெய்த கனமழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டது, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பாதிக்கப்பட்டனர். 

 வடமத்திய மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.

 வடமத்திய மாகாணத்தில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 

 நேற்று (26) நிலவரப்படி, பல மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version