இலங்கை

தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்த கர்ப்பிணி பெண்

Published

on

தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்த கர்ப்பிணி பெண்

திருகோணமலை கந்தளாய் பகுதியில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட தாயொருவர் இயற்கையான பிரசவத்துக்கு உட்படுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவமொன்று  பதிவாகியுள்ளது.

கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக குறித்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

கந்தளாய், கெமுனு மாவத்தையில் வசித்துவந்த 32 வயதுடைய பெண்ணொருவர் தமது இரண்டாவது குழந்தை பிரசவத்துக்காக கடந்த 22 ஆம் திகதி கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தாயின் ஆரம்ப பரிசோதனைகளின் போது, சிசேரியன் மூலம் குழந்தையைப் பிரசவிக்க வேண்டும் என பரிந்துரைந்திருந்த வைத்தியர்கள், பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பரிசோதனை அறிக்கைகள் மருத்துவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

அதன்படி, பிரசவத்திற்காக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குறித்த அறிக்கைகள் வைத்தியர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எனினும், குறித்த தாயை சிசேரியனுக்கு உட்படுத்தாமல் இயற்கையான பிரசவத்திற்கு வைத்தியர்கள் அனுமதித்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த மரணம் ஏற்பட்டதாகவும், அதற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version