விளையாட்டு

டேய் பைத்தியம்… கமெண்ட்டில் ரசிகரை திட்டிய அஸ்வின்: இதுதான் காரணமா?

Published

on

டேய் பைத்தியம்… கமெண்ட்டில் ரசிகரை திட்டிய அஸ்வின்: இதுதான் காரணமா?

இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தைச்  சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், நடிகர் அஜித் உள்பட 12 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், அஜித் மற்றும் அஸ்வினுக்கு நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். தனுஷ் தனது பதிவில், “உயரிய விருதான பத்ம பூஷண் விருது பெற்ற அன்புள்ள அஜித் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இதேபோல், பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழக கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வினையும் வாழ்த்துகிறேன். அந்தந்த துறைகளில் தேசத்தை பெருமைப்படுத்திய பத்ம விருது பெற்ற மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்று அவர் பதிவிட்டார். Thank you bro🙏இந்நிலையில், சமூக வலைதள பக்கம் வாயிலாக தனக்கு வாழ்த்து தெரிவித்த தனுசுக்கு அஸ்வின் ‘நன்றி சகோதரரே’ எனக் குறிப்பிட்டு பதிலளித்திருந்தார். இந்த நிலையில், அஸ்வினின் இந்தப் பதிவுக்கு கமெண்ட் போட்ட நெட்டிசன் ஒருவர்,’ நன்றியை முதலில் நீங்கள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தான் தெரிவிக்க வேண்டும்’, என்று இந்தியில் கூறினார். இதனால் கடுப்பான அஸ்வின், ‘டேய் பைத்தியம்’ எனக் காட்டமாக பதிலளித்துள்ளார். Dey paithiyamஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்ரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version