இலங்கை

தகாத உறவால் திருமணமான இளைஞரை கொலை செய்த இளம் பெண்

Published

on

தகாத உறவால் திருமணமான இளைஞரை கொலை செய்த இளம் பெண்

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை 19 வயது இளம் பெண்ணொருவர் நடத்தியுள்ளதுடன், சம்பவத்தில் 31 வயதான இளைஞரே உயிரிழந்தார்.

Advertisement

இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத நிலையில், வீரசேகரகம பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாறியதாக பொலிஸ் விசாரனையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

தாக்குதலை நடத்திய இளம் பெண், ஹல்தமுல்லவில் உள்ள சொரகுனே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

கத்திக்குத்துக்குப் பிறகு, அந்த இளைஞர் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version