இலங்கை

மன்னாரில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரை

Published

on

மன்னாரில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரை

  மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27 ) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்குப் பின் பகுதியில் உள்ள வீடொன்றே தீப்பற்றி எரிந்தது.

Advertisement

இதனையடுத்து அயலில் உள்ள மக்கள் விரைவாகச் செய்யப்பட்டதனால் தீப்பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவ முன்னதாக அணைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மன்னார் மின்சார சபை, மன்னார் நகர சபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீ பரவல் காரணமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லையெனினும் வீட்டில் காணப்பட்ட உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version