இலங்கை

15 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு உப்பு இறக்குமதி

Published

on

15 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு உப்பு இறக்குமதி

  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

உப்பை பொது நுகர்வுக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

Advertisement

நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை, உப்புத் தொழிற்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நாட்டின் உப்பு நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உப்பு இல்லாமையால், 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version