டி.வி

உடல் மெலிந்த நிலை: செம்பருத்தி ஷபானாவா இவர்? வைரல் க்ளிக்ஸ்

Published

on

Loading

உடல் மெலிந்த நிலை: செம்பருத்தி ஷபானாவா இவர்? வைரல் க்ளிக்ஸ்

செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது உண்மையாகவே ஷபானா தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஒளிபரப்பான விஜயதசமி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷபானா. அதனைத்தொடர்ந்து, ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில், கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.செம்பருத்தி சீரியலை முடித்த ஷபானா, அடுத்த சில மாதங்களில், பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.செம்பருத்தி சீரியலில் நடித்து வரும்போதே, ஆர்யன் – ஷபானா இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.திருமணத்திற்கு பிறகு, ஆர்யன் ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலும், ஷபானா சன்டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலிலும் நடித்து வந்த நிலையில், இந்த இரு சீரியல்களுமே சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இருவரும் அடுத்து வேறு எந்த சீரியல்களிலும் கமிட் ஆகாத நிலையில், இவர்கள் அடுத்த சீரியல் என்ன என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் இருவரும சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.இதனிடையே தற்போது ஷபானா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். காரணம், ஷபானா இதில் உடல் மெலிந்த நிலையில் இருக்கிறார். இதனால் ஷாக்கான நெட்டிசன்கள், ஷபானாவுக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version