விளையாட்டு

‘லட்சியத்தை விட்டுக் கொடுக்காவிட்டால் வெற்றி பெறலாம்’: அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ் பேட்டி

Published

on

‘லட்சியத்தை விட்டுக் கொடுக்காவிட்டால் வெற்றி பெறலாம்’: அர்ஜுனா விருது பெற்ற மனிஷா ராமதாஸ் பேட்டி

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவை சேர்ந்த  416 விளையாட்டு வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். அத்துடன் 416 வீரர்களுக்கும் நடப்பு ஆண்டுக்காக ரூபாய் இரண்டு கோடியே 55 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக விமானக் கட்டணமாக ரூபாய் 30 லட்சம் அளிக்கப்பட்டது. இதுதவிர சிறப்பாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு ஐந்து கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகஅர்ஜுனா விருதுகளை பெற்ற விளையாட்டு வீரர் – வீராங்கனைகள்   துளசி மதி,  மனிஷா ராமதாஸ், பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவன், இந்திய ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் தாழ்வை அணிவிக்கப்பட்டும் பரிசுகள் வழங்கப்படும் கௌரவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸ், பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கியது மேலும் ஊக்கமளிப்பதாக கூறினார். அத்துடன் அடுத்த முறை பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என தெரிவித்தார். வாழ்வில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்கள் லட்சியத்தை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என குறிப்பிட்டார். லட்சியத்தை விட்டுக் கொடுக்காமல் சரியான பாதையில் பயணித்தால் கண்டிப்பாக அனைவரும் ஒருநாள் வெற்றி பெறலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.செய்தி: சக்தி  சரவணன் – சென்னை. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version