சினிமா
39 வயதாகியும் திருமணமாகவில்லை!! கமல் மகள் ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு இவ்வளவா?
39 வயதாகியும் திருமணமாகவில்லை!! கமல் மகள் ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு இவ்வளவா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமா துறையில் அறிமுகம் ஆனவர்.தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ருதி, ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக திருமண வயது வந்த நடிகைகளிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி திருமணம் எப்போது என்று தான்.அப்படி 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் ஸ்ருதி ஹாசனிடம் இதுபற்றி கேட்டபோது, என் கல்யாணத்திற்கு கரண்ட் பில் கட்ட போறீங்களா, சாப்பாடு போட போறீங்களா, இல்ல இன்விடேஷன் அடிக்க போறீங்களா, இது எதுவும் திருமணம் குறித்து கேள்வி கேட்பவர்கள் செய்ய போவது இல்லை. அதனால் விட்டுவிடுங்கள் இனி இது போன்று கேள்வி கேட்காதீர்கள் என்றார்.இந்நிலையில் 39 வயதை தற்போது எட்டியிருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு படத்திற்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். அப்படி சம்பாதித்து இதுவரை சுமார் 40 முதல் 45 கோடி வரை சொத்து மதிப்பினை வைத்திருக்கிறாராம் ஸ்ருதி ஹாசன்.