சினிமா

‘நான் ஆணையிட்டால்..’ ரீமிக்ஸ் கண்டிப்பா இருக்கா..? மொத்த கொத்தடிமையும் கதறப் போறானுக…

Published

on

‘நான் ஆணையிட்டால்..’ ரீமிக்ஸ் கண்டிப்பா இருக்கா..? மொத்த கொத்தடிமையும் கதறப் போறானுக…

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 69 வது படத்திற்கு ‘ஜனநாயகன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் விஜயின் இறுதி படம் எனவும், அதன் பிறகு முழு நேரமாகவே அரசியலில் களம் இறங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது.சமீபத்தில் ஜனநாயகன் படத்திலிருந்து வெளியான செகண்ட் லுக் போஸ்டரில்  நான் ஆணையிட்டால் என்ற தலைப்பில்,  விஜய்  சாட்டையை கையில் வைத்து சுழற்றுவது போன்ற போஸ்டர் வெளியானது. இது எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்க  வீட்டுப்பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடலை நினைவூட்டும் வகையில் காணப்பட்டது.இதனால் விஜயின் கையில் இருக்கும் சாட்டை எம்ஜிஆர் உடையது என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். மேலும் அரசியல் தலைமைகள் இதற்கு பல விமர்சனங்களையும் முன் வைத்தனர். அத்துடன் இந்த படத்தை தயாரிக்கும் இயக்குநர் எச். வினாத் இந்த படத்தின் டைட்டிலை வைக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.’ஜனநாயகன்’ என்று இந்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்ட காரணத்தினால் இந்தப் படம் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை நடத்துவது கஷ்டம் எனவும் ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் படம் வெளி வரும்போது தளபதியின் பவர் என்ன என்று ஏனைய ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த படம் நிச்சயமாக இண்டஸ்ட்ரி ஹிட் அடிப்பது உறுதி என தளபதி ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் வழங்கிய பேட்டி ஒன்றில், விஜயின் 69 ஆவது படமான ஜனநாயகன் பற்றி  பேசியுள்ளார்.அதன்படி அவர் கூறுகையில், ஜனநாயகன் படத்தில் நான் ஆணையிட்டால் பாடல் நிச்சயமாக ரீமிக்ஸ் இருக்கும் என நம்புகிறேன். அப்படி இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகும்  போதே நான் ஆணையிட்டால் என்ற டைட்டிலோடு தான் பதிவிட்டுள்ளனர். அதில் விஜய் எம்ஜிஆர் போலவே தனது கையில் சாட்டையை வைத்து சுழற்றுகின்றார். எனவே, நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற எம்ஜிஆர் பாடியதை வைத்து தான் விஜய் படத்தை புரொடியூஸ் பண்ண போறாங்க.. இதனால் அந்த பாட்டு ரீமிக்ஸ் பண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version