இலங்கை

ஹபரணையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 16 பேர் காயம்!

Published

on

Loading

ஹபரணையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 16 பேர் காயம்!

ஹபரணை – மின்னேரியா வீதியின் 07வது தூண் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

 இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது மருத்துவமனையிலும், ஹபரண பிராந்திய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 கட்டுநாயக்கவிலிருந்து சிறிபுர பகுதியில் ஒரு இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதாகவும், தனியார் பேருந்தின் சாரதி கவனக்குறைவாகவே வாகனத்தை ஓட்டியதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version