உலகம்

நடுவானில் ஹெலிகாப்டருடன் விமானம் மோதி விபத்து!

Published

on

நடுவானில் ஹெலிகாப்டருடன் விமானம் மோதி விபத்து!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 30/01/2025 | Edited on 30/01/2025

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நோக்கி இராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று, இந்த ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய விமானம் பொடொமாக் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அதே சமயம் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனையடுத்து, ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம், விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

இந்த குழுவினர் விமான விபத்து நிகழ்ந்தது எப்படி? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் மோதிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • நடுவானில் ஹெலிகாப்டருடன் விமானம் மோதி விபத்து!

  • ஒலி மாசுவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு அறிவிப்பு!

  • மாணவிகளின் பாதுகாப்பு; ஆளுநரின் கருத்தில் முரண்பாடு!

  • குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி படுகொலை; சென்னையில் பயங்கரம்!

  • பட்ஜெட் கூட்டத்தொடர் – 2025 : இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version