உலகம்

கொங்கோவில் தாக்குதல்கள் உக்கிரம்!

Published

on

Loading

கொங்கோவில் தாக்குதல்கள் உக்கிரம்!

கிழக்கு கொங்கோ இராச்சியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள ஆ23 என்ற கிளர்ச்சிக் குழு கொமா நகரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் கொங்கோ இராணுவத்திற்கும் குறித்த கிளர்ச்சிக் குழுவிற்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

தாக்குதல்களினால் 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக கொமா நகரின் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆ23 கிளர்ச்சிக் குழுவிற்கு ருவாண்டா ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கொங்கோவின் குறிப்பிட்ட நகரங்களை கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சிக் குழு தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version