இந்தியா

தாயுடன் தகாத உறவு – கொடூரமாக கொலை செய்த மகன்கள்!

Published

on

தாயுடன் தகாத உறவு – கொடூரமாக கொலை செய்த மகன்கள்!

தாய் உடன் தகாத உறவை வைத்திருந்த கொத்தனாரை, அந்த பெண்ணின் இரண்டு மகன்கள் கத்தியால் குத்தி, குடலை உருவி வீசியதுடன், துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கிராமம் ஒன்றில் தாய் மற்றும் சஞ்சய் தாகூர் (வயது 27), ஜெயேஷ் தாகூர் (23) ஆகிய அவரது இரண்டு மகன்கள் வசித்து வந்துள்ளனர். பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்.

Advertisement

இந்த பெண்ணிற்கு கொத்தனார் வேலை செய்து வந்த 53 வயதான ரடன்ஜி தாகூர் என்பவர் உடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவு பல வருடங்களாக நீடித்துள்ளது. இருவருக்கும் இடையிலான உறவு, அந்த பெண்ணின் மகன்களுக்கு பிடிக்கவில்லை.

இது தொடர்பாக பலமுறை ரடன்ஜி தாகூரிடம், தாய் உடனான தகாத உறவை நிறுத்திக் கொள்ள வற்புறுத்தியுள்ளனர். ஆனால் ரடன்ஜி தாகூர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார்.

தனது அம்மாவை இழிவுப்படுத்துவதாகவும், மறைந்த அப்பாவை கலங்கப்படுத்துவதாகவும் கருதினர். மேலும் உறவினர் இருவரையும் பார்த்து ஏளனமாக பேசியது மகன்களுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.

Advertisement

இதனால் ரடன்ஜி தாகூரை கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த வார தொடக்கத்தில் இவர்களின் வீட்டருகே ரடன்ஜி தாகூர் வந்தபோது, இரண்டு மகன்களும ரடன்ஜி தாகூரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் ரடன்ஜி நிலைகுலைந்தார். உடனே இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தினர்.

இதில் ரடன்ஜி தாகூரின் குடல் கீழே சரிந்தது. இருந்தபோதிலும் அவர்களுடைய ஆத்திரம் அடங்கவில்லை. குடலை எடுத்து வானத்தை நோக்கி வீசி, துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ளனர்.

இவை அனைத்தும் பட்டப்பகலில் பெரும்பாலானோரின் முன்னிலையில் நடந்துள்ளனர். சிலர் இதை தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பலனளிக்கவில்லை. பிறகு இருவருமே மோட்டர் சைக்கிள் தப்பி ஓடிவிட்டனர்.

Advertisement

இது தொடர்பாக ரடன்ஜி தாகூர் மகன் பொலிஸில் புகார் அளிக்க, பொலிஸார் தொலைபேசி இலக்கத்தை வைத்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version