வணிகம்
பொருளாதார ஆய்வு 2024-25: பணியாளர்களுக்கு பாதிப்பாகும் ஏ.ஐ – மேம்பாட்டிற்காக நிறுவனங்களுக்கு அழைப்பு
பொருளாதார ஆய்வு 2024-25: பணியாளர்களுக்கு பாதிப்பாகும் ஏ.ஐ – மேம்பாட்டிற்காக நிறுவனங்களுக்கு அழைப்பு
குறைந்த திறன் மற்றும் குறைந்த மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் இந்தியாவின் பணியாளர்கள், செயற்கை நுண்ணறிவால் (AI) பாதிக்கப்படக்கூடியவர்கள் என பொருளாதார ஆய்வு 2024-25 தெரிவித்துள்ளது. அவர்களை மேம்படுத்த “வலுவான நிறுவனங்கள்” தேவை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களை நடுத்தர மற்றும் உயர் நிலைக்கு மாற்ற உதவும். ஆங்கிலத்தில் படிக்கவும்: Economic Survey 2024-25: India’s workforce vulnerable to AI, need ‘robust institutions’ to upskill them “உலகம் முழுவதும் உழைப்பில், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் உணரப்பட்டாலும், அதன் அளவு மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த தனிநபர் வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு பிரச்சனை பெரிதாகிவிட்டது” என்று ஆய்வு முடிவு கூறுகிறது.இந்த ஆய்வு “ஸ்டுவர்டிங் இன்ஸ்டிடியூஷன்ஸ்” என்ற கருத்தை முன்மொழிகிறது. புதுமைகளைத் தடுக்காமல், பொது நலனை நேர்த்தியாகச் சமன்படுத்தும் அணுகுமுறையை வடிவமைப்பதற்கு, நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”புதுமைக்கான கட்டுப்பாடுகளை விதிப்பதையோ அல்லது தொழில்நுட்பத்திற்கான குறுகிய பயன்பாடுகளை ஆணையிடுவதையோ குறிக்கவில்லை” என்று ஆய்வு தெளிவுபடுத்தியது. தொழில்நுட்ப பயன்பாடுகளின் துணை தயாரிப்புகளாக வெளிப்படும் எந்தவொரு பாதகமான விளைவுகளையும் குறைக்க முடியும் என வாதிடப்படுகிறது.செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, சமூக மதிப்புகளுடன் ஒத்துப்போகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் புத்தாக்கத்தை சமநிலைப்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்த, ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என ஆய்வு அறிவுறுத்துகிறது. இதன் 13-வது அத்தியாத்தில், ‘ செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் உழைப்பு: நெருக்கடி அல்லது வினையூக்கி?’ என்ற தலைப்பில், கார்ப்பரேட் துறை அதிக சமூகப் பொறுப்பைக் காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”நிறுவனங்கள் நீண்ட காலமாக செயற்கை நுண்ணறிவின் அறிமுகத்தை மேம்படுத்தவில்லை மற்றும் அதனை உணர்திறனுடன் கையாளவில்லை” என்று ஆய்வு முடிவு கூறுகிறது.”ஒரு வலுவான எதிர்காலமானது, தொழில்துறை-கல்வி கூட்டாண்மைகள், தொடர்ச்சியான திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கும் வகையில் கற்றல் மாதிரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரு வலுவான திறன் சுற்றுச்சூழலின் இந்த பார்வையை அடைய, பல முக்கிய பகுதிகளுக்கு கவனம் செலுத்துதல் மற்றும் மூலோபாய தலையீடு தேவைப்படுகிறது” என்று அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு புரட்சியும் தொழிலாளர்களின் பெரும் பகுதியினரை இடமாற்றம் செய்து பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்தது. “நீடித்த தொழிலாளர் இடப்பெயர்வு என்பது இந்தியா போன்ற தொழிலாளர்-உபரி நாடு தாங்க முடியாத ஒன்று” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் விவசாயம் அல்லாத துறையில் ஆண்டுதோறும் சராசரியாக 78.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், ஐ.டி.யின் கணிசமான பங்கைக் கொண்டு, இந்தியா சேவைகள் சார்ந்த பொருளாதாரமாக உள்ளது. இதனிடையே, செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் உள்ள நிறுவனங்கள் தொழில்நுட்பத்திற்கு பதிலாக தொழிலாளர்களை மாற்றலாம் என்று ஆய்வில் கூறப்படுகிறது.இந்தியாவும் ஒரு நுகர்வு அடிப்படையிலான பொருளாதாரமாகும், எனவே அதன் பணியாளர்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் நுகர்வு வீழ்ச்சியானது மேக்ரோ பொருளாதார தாக்கங்களைக் கொண்டிருக்கும். மோசமான கணிப்புகள் நிறைவேறினால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை திசைதிருப்பும் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னோக்கிப் பார்க்கும்போது, நாட்டின் பிரதானமாக சேவைகள் சார்ந்த பொருளாதாரம், அதன் இளம் மற்றும் ஆற்றல்மிக்க மக்கள்தொகையுடன் இணைந்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் நன்மைகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு வளமான பாதையை வழங்குகிறது. ஆனால், இதனை அடைய முன்னெச்சரிக்கையாகவும் கவனமாகவும் நிர்வாகம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- சௌம்யரேந்திர பாரிக்